மழை வரும் காலம்
மன் வாசனை வீசும்
மகிழ்ச்சியில் உள்ளம் ததும்பும்
மதில் சுவர் நீர் ஒழுகி
வீட்டு முத்தத்தில் தங்கும்...
இராமர் பச்சை கோடு போட்ட டாப்ப்
ஒழுகும் போது வைத்து கொள்ள...
நீர்க்குமிழி ஒவ்வொன்றும்
நிலையில்லா வாழ்வை புலப்படுத்தும்
இருக்கும் வாழ்வை அனுபவி என்று...
தம்பியும் நானும்
அம்மாவின் உதவியுடன்
விடுவோம் காகித TITANIC...
அதுவும் மூழ்கியது
மழையின் துளிகளால்....
ஆசை யாரை விட்டது
எடுடா இன்னொரு பேப்பர்
அம்மா கத்து வாள்...!!!
ஒண்ட கூட இடம் இல்லாமல்
உண்ண இருந்த தட்டுகள் எல்லாம்
தரையின் மேல் பல்லாங்கிகுழிகளாய்
ஆனால்....
மூலைக்கு ஒவ்வொன்றாய்...
ஒவ்வொரு வீட்டிற்கும்
மழை நீர் தொட்டி....
இல்லாதவருக்கு
இல்ல மே தொட்டி..
மழையில் நனைந்து விட்டு
வரும் தும்மல் கூட
சுகமாய் இருக்கும்..
இன்னும் நனைய தூண்டும்...
பள்ளி விட்டு திரும்பும் பொழுது
புத்தக பை நனையாமல்
காக்கும் அழகே அழகு.....
காலணியை கையில் கொண்டு
ஓடும் நீரில் கால்கள் துள்ளல் போடும்..
குட்டி குட்டி தவளைகள் கும்மாளம் அடிக்கும்....
அந்த குளிரிலும்
மின் விசிறி ஐந்தில் சூழலும்...
சூட சூட பஜ்ஜி சுண்டி இழுக்கும்....
எந்த காலம் வந்தாலும்....
மழைக்காலத்துக்கு மவுசு அதிகம் தான்
மகிழ்ச்சியும் அதிகம் தான்.........
2 comments:
really nice one
Thanks Krishna
Post a Comment