Wednesday, April 2, 2008

இயலாமை

சுற்றி படர்ந்த கொடிகளும்
கண்ணுக்கு விருந்தான காட்சிகளும்
பக்கத்தில் இருந்த விரிந்த புத்தகத்தின்
பக்கங்களாய் காற்றில் பறக்க தொடங்கியது

மேலே பறந்த வண்ணத்து பூச்சிகளின்

சிறகினுள் அடைபட்ட வானமாய்
தவித்ெழுந்தது
ஏழை சிறுமியின் மீதான பார்வை...

கோடிட்டு காட்ட முயன்று
தோற்று போயின
குழவியின் விரல்கள்...

இதழ் பிரித்து மொழி பேச
இயலாமல் போனது
தூரமாய் இருந்த
கிழவியின் காய்ந்து போன
இதழ்கள்

எல்லையற்று விரிந்த
உலகின்
மீதான பார்வை
இன்னும்
மலராத மொட்டுக்களாய்.

2 comments:

நிலாரசிகன் said...

//இதழ் பிரித்து மொழி பேச
இயலாமல் போனது
தூரமாய் இருந்த
கிழவியின் காய்ந்து போன
இதழ்கள் //

மிகச்சிறந்த வரிகள்.பாராட்டுக்கள்.

கௌசல்யா சங்கர் நம்பி said...

நன்றி நிலா.....