நினைவுகளின் விசும்பினின்று நீ
நித்தமும் மழை பொழிகிறாய்
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...
வசந்தம் வந்தெதிர்பார்க்க
வாழ்க்கைக் கடலில் நீந்தலானோம்
காத்திருப்பு தாளாமல்
கல்யாணம் எதிர் கொண்டோம்
ஓதவனம் தாண்டி- வாழ்க்கை
ஒளி சேர்க்க சென்று விட்டாய்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்
தொலைபேசியில் வாழ்வு கண்டோம்
ஒருவருக்கொருவர் ஒருவாமை இல்லாமல்....
ஒரு கால் நீ போகாமலிருந்திருந்தால்
ஓராயிரம் இன்பங்கள் காலடியில்...
வரும் நாளை எதிர் பார்த்து
வாயிலில் நின்றிருந்தேன்
வருடம் போனது தெரியவில்லை
வயிறும் பெருத்து போனதடா
வளை சூட நாள் பார்த்து
தொலைபேசியில் ஒலி கண்டாய்
தொப்புள் கொடி அறும் முன்னே
என் முன்னே நீ இருந்திடடா
பிள்ளை அழுகுரல் கேட்டவுடனே
உன் வதனம் என் முன் ஆடும்...
கிலேசத்துடன் நானிருந்தேன்
மயங்கிய நிலையினளாய்
எண்ணியது நடவாமல்...
வீடு வருவாய் என்றிருந்தேன்...
நம் குலக்கொழுந்தோடு
என்றுமில்லாமல்...
எனக்கான நீ
சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி....
Thursday, September 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
azhagana kavithai kausalya...
vazthukkal...
saran....
Nandri Saran....
//நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி//
அசத்தல்..
"சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி...."
மிக அழுத்தமான பிரயோகம் கௌசல்யா ...எண்ணத்தின் தீவிரம் வரிகளில் தெரிகிறது ...தொடர்ந்து எழதுங்கள். வாழ்த்துக்கள்
நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.காம்
-கார்த்தி
Kadhalikum ashai varukuthadi,
Un kavithakalai padikayel...
Kadhal kondea viten,
Un kavithaikalin meethu...
உங்க கவிதை நல்லா இருக்குன்னு உங்கள வாழ்த்த மாட்டேன். ஏனன்றால் நீங்கள் உங்கள் உள்ள குமுறலை கவிதயாய் கொட்டி உள்ளீர்கள்.
தொலைபேசியில் வாழ்வு கண்டோம்
ஒருவருக்கொருவர் ஒருவாமை இல்லாமல்....
ஒரு கால் நீ போகாமலிருந்திருந்தால்
ஓராயிரம் இன்பங்கள் காலடியில்... .....
ஆஹா ... என்ன ஒரு வார்த்தை பிரயோகம் ....
தொடரட்டும் உங்கள் நினைவலைகள் ...
---- பாலு
arumaiyana kavithai kousi....valthukkal.... thodarnthu eluthungal....
aaaavaludan....
v.kousalya
Thanks Kousalya
நன்றி பாலு ...
நன்றி கார்த்தி ..
கண்டிப்பாக பார்க்கிறேன்...
Nandri Valar...
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...
------------------
தீநுரையாய்......
ஓதவனம் தாண்டி- ஓதவனம்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்
------------------------
ஓமிடி, ஓகையில்
ஒருவாமை இல்லாமல்....
------------------------------
ஒருவாமை
கெளசல்யா அவர்களே என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம். உங்களால் இந்த சொற்கள் எனக்கு இன்று பழக்கமானது. உங்களின் கவிதையைப் படித்தவுடன் தான் இன்னும் நான் தமிழ் அறிவதில் எந்த இடத்தில் உள்ளேன் என்பதையே அறிந்துக் கொள்ள முடிந்தது.
sowmya please remove the word verification for easy commenting for visitors sowmya.
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...
------------------
தீநுரையாய்......
ஓதவனம் தாண்டி- ஓதவனம்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்
------------------------
ஓமிடி, ஓகையில்
ஒருவாமை இல்லாமல்....
------------------------------
ஒருவாமை
கெளசல்யா அவர்களே என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம். உங்களால் இந்த சொற்கள் எனக்கு இன்று பழக்கமானது. உங்களின் கவிதையைப் படித்தவுடன் தான் இன்னும் நான் தமிழ் அறிவதில் எந்த இடத்தில் உள்ளேன் என்பதையே அறிந்துக் கொள்ள முடிந்தது.
sowmya please remove the word verification for easy commenting for visitors sowmya.
Post a Comment