Tuesday, April 29, 2008

சின்ன வயதில் பாடிய பாடல்கள்

எப்போதும் நினைவில் நிற்கிற பாடல் இது தான்.....
1)நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல துதி செய்....

அடுத்தது கை வீசம்மா கை வீசு... :)
2)கை வீசம்மா கை வீசு
கடைக்கு போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் திங்கலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் நடக்கலாம் கை வீசு
கோவிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு......

3)தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும்
உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணாவுக்கு ரெண்டு
எனக்கு ஒன்னு..

இந்த பாட்டு அம்மா சொல்லி தரும் போது நான் நிறைய
கேள்வி கேட்டதாக சொல்லி இருக்காங்க ...
எனக்கு தான் அண்ணாவே இல்லையே
அப்புறம் ஏன் அவனுக்கு ரெண்டு?(இது தான் என்னுடைய கேள்வி :))

மழை வரும் போதெல்லாம் பாடி மகிழ்ந்த பாடல்....

4)வானத்திலே திருவிழா
வழக்கமான ஒரு விழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூரலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் ஆடுமே
தண்ணீரிலே ஆடுமே...

இந்த பதிவினை துவங்கி
சிறு வயது பாடல்களை
பதிவுசெய்ய வைத்து ....
மலரும் நினைவுகளை
அசை போட செய்த
பிரேமுக்கு ....ஒரு ஓ ஓ ஓ
நன்றி பிரேம்....

நான் யாரை மாட்டி விட போறேனா.....
இவங்க மூணு பேரை தான்...:)


நிலா ரசிகன்

ப்ரியன்

ஷைலஜா











2 comments:

cheena (சீனா) said...

கௌசல்யா

அருமை அருமை - கொசுவத்தி சுத்திட்டிங்க - அப்படியே நினைத்துப் பார்த்தேன் - மனமகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள்

வேர்டு வெரிபிகேசன் தேவையா - சிந்திக்கவும்

நல்வாழ்த்துகள்

கௌசல்யா சங்கர் நம்பி said...

:) நன்றி சீனா......