Monday, June 8, 2009



முகடு பல தாண்டிடு


முழு மூச்சாய் உயர்ந்திடு


முடியும் என்று சொல்லி பார்


முடியாததுவும் முடியும்.........

Thursday, June 4, 2009


பேசாமலேயே இருந்து விடு

காதல் இல்லை சொல் - என்

காதில் விழ வேண்டாம்

மௌனம் காத்து விடுகிறேன்

மௌவலாய்....


Tuesday, June 2, 2009



இருவராய் நடந்தாலும்


தடம் ஒன்றாய்......


உன் வழிப்பற்றி


என் பாதங்கள்......

Thursday, May 28, 2009


உன்னுடனான நினைவுகளில்
என்னுடன் நீ
எப்பொழுதும் இருக்கிறாய்
கண்ணீராய்....

Monday, March 9, 2009

பெண்ணே நீ

கவிதையாய் மிளிர்கிறாய்
காற்றில் தென்றலாய் உலவுகின்றாய்

கற்பனைகள் அலை மோதும்
கடலாய் தவழ்கின்றாய்

காதலின் மெல்லிசையாய்
கருத்துக்களின் கருவிடமாய்
கண்மணி நீ உள்ளாய்
காலத்தின் பெட்டகமாய்

கவியான வாழ்வு தன்னில்
கலக்கம் வேண்டாமடி
கரை தன்னை நீந்திடுவாய்
கண்ணீர் கூடாதடி

வலியின் கொடுமை புரிந்து விட்டால்
வாழ்வின் அர்த்தம் விளங்குமடி
வளர்ந்து விடடி பெண்ணே நீ..
வானம் என்றும் அருகிலடி....

Thursday, September 18, 2008

எனக்கான நீ

நினைவுகளின் விசும்பினின்று நீ
நித்தமும் மழை பொழிகிறாய்
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...


வசந்தம் வந்தெதிர்பார்க்க
வாழ்க்கைக் கடலில் நீந்தலானோம்
காத்திருப்பு தாளாமல்
கல்யாணம் எதிர் கொண்டோம்



ஓதவனம் தாண்டி- வாழ்க்கை
ஒளி சேர்க்க சென்று விட்டாய்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்

தொலைபேசியில் வாழ்வு கண்டோம்
ஒருவருக்கொருவர் ஒருவாமை இல்லாமல்....
ஒரு கால் நீ போகாமலிருந்திருந்தால்
ஓராயிரம் இன்பங்கள் காலடியில்...


வரும் நாளை எதிர் பார்த்து
வாயிலில் நின்றிருந்தேன்
வருடம் போனது தெரியவில்லை
வயிறும் பெருத்து போனதடா


வளை சூட நாள் பார்த்து
தொலைபேசியில் ஒலி கண்டாய்
தொப்புள் கொடி அறும் முன்னே
என் முன்னே நீ இருந்திடடா


பிள்ளை அழுகுரல் கேட்டவுடனே
உன் வதனம் என் முன் ஆடும்...
கிலேசத்துடன் நானிருந்தேன்
மயங்கிய நிலையினளாய்


எண்ணியது நடவாமல்...
வீடு வருவாய் என்றிருந்தேன்...
நம் குலக்கொழுந்தோடு

என்றுமில்லாமல்...
எனக்கான நீ
சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி....

Tuesday, August 19, 2008

ஒரு மாலையில்

பூங்காவின் நெரிசலில்
ஒரு ஓரமாய் நின்றிருந்தேன்
நிஜங்களின் நிதர்சனங்களும்
நிழலாடும் எண்ணங்களும்
அலைகளாய் ஆடி சென்றன
மனதுள்....
வார்த்தை பரிமாற்றங்களும்
வசந்தத்தின் கற்பனைகளும்
வாயிலின் முன்
நேர் கோடுகளாய்
வரிசையாய் சென்ற
எறும்புகளின் தேடல்களும்
எண்ணங்களின் இசை பாடல்களும்
எல்லையில்லா ஆசையாய் ....
வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து தட்டேந்திய
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்தலாய்...
எப்போதும் அந்த மரத்தின் அடியில்
நிற்கும் கிழவியை காண வில்லை
இன்று யாரும் இல்லை
நாளை யாரோ.....
நாளையும் செல்வேன்
வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண