Thursday, April 10, 2008

இப்படிக்கு ரோஸ்
இப்படிக்கு ரோஸ் திருநங்கைகள் பற்றிய தவறான கருத்துக்களுக்கு மத்தியில் இந்த சமூகத்திற்கு கொடுக்கும் ஒரு சாட்டையடியாக விளங்கும் விஜய் தொலைக்காட்சி வழங்கிக் கொண்டிருக்கும் "இப்படிக்கு ரோஸ்" வரவேற்கதக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி.


03-04-08நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள்ஹேமா ஆசிரியை, ஸ்ரீதேவி மாடல்மற்றும் தனது எழுத்து மூலம் சமூகத்தின் பார்வையை
தனது பக்கம் திசை திருப்பிய "நான் சரவணன் வித்யா "புகழ்
லிவிங் ஸ்மைல் வித்யா"...நிகழ்ச்சி பார்த்த எனக்குள் முதலில் உண்மையாகவே இவர்கள் திருநங்கைகள் தானா என்ற ஒரு பெரிய சந்தேகம். மூவரின் வார்த்தைகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது அவர்களின் தன்னம்பிக்கை.


திருநங்கை ஹேமா திருமணம் ஆனவர் அதிலும் காதல் திருமணம் என்று கூறிய பொழுது சமூகத்தில் இன்னும் இருதயம் உள்ளவர்கள் உலவுகிறார்கள் என்பது புலப்பட்டது.
அவரும் அவருடைய கணவரும் ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து
வளர்க்கிறார்கள் என்று கேட்டபொழுது அவர்கள் மேல் உள்ள மரியாதை
இன்னும் மேலோங்கியது
அவருடைய அம்மா மற்றும் கணவர் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டுஅரவணைத்ததுஉண்மையாகவரவேற்கதக்கது.ஊனமுள்ள பெண்களையும்,கைம்பெண்களையும் வாழ்க்கைத் துணைவியாக ஏற்று கொள்ள தயங்கும் இந்த சமூகத்தில் இருக்கும் ஆண்களுக்கு மத்தியில் திருநங்கை ஹேமா அவர்களை திருமணம் புரிந்து திருமதி ஆக்கிய அந்த மனிதருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல ...
அடுத்தது ஸ்ரீதேவி மாடல் துறையில் இருப்பவர்.அவருடைய வீட்டில்
பெற்றெடுத்த தாயே ஒதுக்கிய சமயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்வை
எதிர் கொண்டவர்.மும்பையில் எட்டு வருட வாழ்க்கைக்கு பிறகு மீண்டும்
பிறந்த வீடு வந்த பொழுதும் ஏற்க மனமில்லை பெற்றவளின் இதயத்தில் ...
அவருடைய அண்ணியின் உதவியாலும் ஆதரவாலும் கொஞ்சம் கொஞ்சமாக
தாயின் அன்பிற்கு பாத்திரமானவர். இப்பொழுது அந்த தாய் அவரை ஒரு
குழந்தையாக பாவிக்கி றார் என்று கூறிய பொழுது தாய்மை வென்றது. எல்லோரையும் தனது எழுத்தால் கவர்ந்தவர் லிவிங் ஸ்மைல் வித்யா. பெயரிலேயே அவரின் புன்னகை எடுத்து உரைக்கிறது அவரின் தன்னம்பிக்கை. ஒவ்வொரு வார்த்தை பேசும் பொழுதும் அப்படி ஒரு தெளிவு.
சென்னையில் நடந்த புத்தக கண் கா ட் சியில் இவர் எழுதிய நான் (சரவணன் ) வித்யா வாங்கி படித்த பொழுது தான் தெரிந்தது திருநங்கைகள் இந்த சமூகத்தில் எதிர் கொள்ளும் அவலம்.புத்தகம் வாங்கி படித்து கலங்கியவர்களில் நானும் ஒருத்தி.நேற்றைய நிகழ்ச்சியில் நேரில் கண்ட பொழுது அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் திரு நங் கை க ளை பற்றி தவறாக நினைப்பவர் களுக்கு ஒரு பாட ம்.நடந்த சில நிகழ்வுகளை கண் முன் நி றுத் திய பொழுது படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிக்கவே செய்தது.நிகழ்ச்சியை வழங்கிய திருநங்கை ரோஸ் இவரிடம் காதல் அனுபவம் உள்ளதா என்று கேட்ட பொழுது வெட்கத்துடன் ஒப்பு கொண்டார். அவருடைய குடும்பத்தாரும் ஹேமாவின் குடும்பத்தினரை போல ஒப்பு கொண்டு விரைவில் திருமதி பதவி அடைய வித்யாவிற்கு வாழ்த்துக்கள் .ஒவ்வொரு நிகழ்வுகளை சொல்லும் போதும் கண்களில் கண்ணீர் தழும்பினாலும் புன்னகை கண்களையும் இதழையும் தழுவி கொண்டே இருந்தது.
லிவிங் ஸ்மைல் வித்யாதனக்கு இட்டு கொண்ட பெயர் மிகவும் பொருத்தம் என்பதை அழுத்தமாக உறுதி படுத்தியது.நிகழ்ச்சியை நே ர் த் தி யா க கொண்டு சென்ற திருநங்கை ரோஸ் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மொத்தததில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி சமூகததில் ஒரு மிக பெரிய மாற்றம் கொண்டு வரும் என்று
நினைத்து பார்க்கும் பொழுது ஒரு மன நிறைவு.நல்ல பல நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டு இருக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு "இப்படிக்கு ரோஸ்" இன்னுமொரு "மைல் கல்"இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டாலாவது சமூகத்தில் திருநங்கைகள் மீதுள்ள தவறான எண்ணங்கள், அருவருப்பான பார்வைகள் விலகுமாயின் திருநங்கைகள்வாழ்வும் ஒளி மயமாகும் என்பதில்
எள்ளளவும் அய்யமில்லை.
திருநங்கைகளின் விருப்பப்படி அரசும் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம்
கொடுக்குமாயின் இந்த சமூகத்தில் திருநங்கைகள் திருப்பங்கள் அளிப்பார்கள் சிகரங்கள் பல தொடுவார்கள்.