நாலு பக்க நோட்டுக்குள்ள
நம்ம கத எழுதி நிப்பான்
நாடாளும் ராசானாலும்
ஆறடினு சொல்ல மறப்பான்
உண்டான வாழ்க்கையில
உளவு பல இருக்குதுன்னு - இவன்
உள்ளூரு கோவிலுக்கு
நேர்த்தி கடன் செய்ய வப்பான்
விதி தானு சொல்லி
விவரமா விளக்கி - அவன்
வீடு வாங்க வழி செஞ்சு - உன்ன
வீதியில நிறுத்திடுவான்
கொண்ட குடும்பம் விளக்கெரிய
விதிய நம்பி நீக்கறியே - உன்
மதி எங்க போச்சுதடா
தறி கெட்ட மானுடனே
Thursday, March 20, 2008
Thursday, March 6, 2008
அம்மாவுக்காக.....

பிறந்த நாள் முதல்
அம்மாவின் அரவணைப்பு
இன்று வரை....
என் அழுகுரல் கேட்டு
அணைத்தெடுத்து
உதிரம் வார்த்தவள்
உதிரம் வார்த்தவள்
ஆள்காட்டி விரல் பிடித்து
உலகை காண்பித்தவள் ...
பள்ளி பருவ நாட்களில்
பள்ளி பருவ நாட்களில்
பாடம் சொல்லி கொடுத்தவள் - என்
பார்வையயை தீட்டி
செதுக்கியவள்
பயிற்றுவித்தவள்....
பெண்மை எனும் நேரம்
நான் அடைந்த பொழுது
கண்ணிமைக்காமல் காத்தவள்....
கல்லூரி வாழ்வில்
என் தோழியவள்
என் தோழியவள்
காதலி அவள்...
நான் உறங்க
அவள் விழிப்பாள்...
நான் வாழ கண்ணீர் சிந்துவாள்...
ஆயிற்று
அப்படி இப்படி என்று
இருபத்தி நான்கு...
என்னை அறிமுகப்படுத்தியவள் - இன்று
இன்னொருவன் கையில்
கரம் சேர்க்க ஆயத்தம்....
கற்பனைகள் சிதறும் என்னுள்
காட்டாற்று வெள்ளமாய்
காதலனுடன் அல்ல..என்னை
உலகுக்கு அறிமுகம் செய்ய...
விவாதம் செய்ய வில்லை
விவாஹம் செய்ய சம்மதம் -என்
ஆசைகளை துறந்தேன்
அறிவு கொடுத்தவளுக்காக...
முழு மனதுடன்
மணவறையில்
முக்காலும்
உனக்காய் அம்மா...
அவன் யாரென தெரியாது..
பேரென்ன தெரியாது
ஊரென்ன தெரியாது...
உறவாக சொன்னாய்
உறவை கொண்டேன்
உயிராக சொன்னாய்
உயிரை சுமந்தேன்....
நீ என்னை
வழி நடத்தினாய் - என்னை
உன்னில் கொடுத்தேன்
உனக்கு தெரியும்
எனக்கு - எது
ஏற்றம் என்று....
எனக்கு இதில்
வருத்தம் இல்லை
என்னை நீ
தாழ்த்தவும் இல்லை...
என்றும்
நீ என்னுயிர் தான்
என்னை கொடுத்தேன்
உன்னில் நான் தாயே..
என்னை நீ சுமந்தாய்
என்ன வலி கண்டாயோ..
நான் உலகில் நடமாட...
தொப்புள் கொடி பந்தம்
என்றும் புனிதம்
உனக்கு தெரியும் - எனக்கு
எது ஏற்றம் என்று...
Thursday, February 14, 2008
நானும் ஒற்றை ரோஜாவும்

என் விழிகளுக்கான தேடலில்
உன்னை தந்தாய்
காதல் எனும் கவிதை தந்தாய்...
பனி துளி ஒவ்வொன்றிலும்
உன் அழகு முகம்...
என் கண்ணீர் துளி ஒவ்வொன்றிலும்
நம் காதல் பிம்பம்...
காதல் எனும் கோட்டையில்
கைதியாகிய நான்...
உன் மன கோவிலில்
பாடி திரியும் பட்சி...
ஒன்றோன்றாக உன்னிடம்
இருந்து திருடிய என்னை
மொத்தமாக திருடி விட்டாய்
உன் ஒரே ஒரு புன்னகையால்...
உன் நினைவுகளின் பிடியில்..
நானும்
நீ கொடுத்த
ஒற்றை ரோஜாவும்...
Friday, January 11, 2008
பூக்களில் உறங்கும் மௌனங்கள்

எத்தனையோ எதிர் பார்ப்புகளுடன்
காத்திருந்து
காதலனின் வருகையில்
கொண்டாடும் மௌனம்....
உன் விழி பார்வையில்
உன் விழி பார்வையில்
வார்த்தைகளின் விளையாடலில்
ஒளிந்திருக்கும் மௌனம்...
உன் சீண்ட ல்களின்
சத்ததில்லும்
உன் சீண்ட ல்களின்
சத்ததில்லும்
குரு குரு பார்வையிலும்
உள்ளம் பூரிக்கும் மௌனம்...
உன்னை என்னவென்று
உன்னை என்னவென்று
வர்ணிக்க முடியாமல்
வார்த்தைகளுக்கான
தேடலில் மௌனம்...
மௌன அழகில்...
மௌன அழகில்...
உன் உறக்கத்தில் கூட
ஆயிரம்
அர்த்த அலைகள்.....
Thursday, December 20, 2007
பெண்
Wednesday, December 19, 2007
சரணம் ஐயப்பா

விடிகாலை சரண கோஷம்
செவியின் ஊடே அமுதூறும்
சரணம் ஐயப்பா தொழும் நேரம்
கவலையெல்லாம் ஓடி போகும்
மகர ஜோதி கண்டு விட்டாலோ
பனி போல துன்பம் நீங்கும்...
ஒவ்வொரு படியிலும் ஐயன் திருப்படி
ஓங்கார நாதத்தின் ஒலிப்ப்டி
ஒய்யார வாழ்விர்க்கு அது அடி....
பம்பை ஓரம் பக்தர்கள் ஸ்நானம்
பாவங்கள் அகலும் நேரம்...
எரிசெறியில் ஆட்டம்
வண்ண பூச்சுகளில் அலங்காரம்......
அய்யனை கண்டு விட்டாலோ
ஆனந்த மயம்..
ஐயப்ப் தரிசனம் கோடி புண்ணியம்....
Tuesday, December 18, 2007
Subscribe to:
Posts (Atom)