Thursday, July 10, 2008

காதலுக்கு கண் உண்டு - சிறுகதை

எவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கறது...மனதுக்குள் நினைத்துக் கொண்டே விரல் நகத்தை சுவைத்துக் கொண்டு இருந்தாள் அகல்யா...கோடம்பாக்க புகைவண்டி நிலையத்தின் இரு பக்கங்களிலும் ரயில்கள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க இவளின்
மனமும் தடதடத்துக் கொண்டிருந்தது.
சாரி அகல்யா கொஞ்சம் லேட் ஆகி
போச்சு, வேகமா நடந்தா நீ திட்டுவ...ஒரே டிராபிக்..
அதான் பொறுமையா வந்தேன் என்ற கதிரின் குரல் கேட்டு நிம்மதி பெரு மூச்சு விட்டாள் ..
டேய் ...என்ன ஆச்சு ஏது ஆச்சுணு எனக்கு எவ்ளோ டென்ஷன் தெரியுமா...மூணு ட்ரெயின் போயாச்சு இன்னிக்கு லேட் தான் ...சரி பரவ
ால்ல ...நேர்ல போய் சொல்லிக்கலாம் என்றாள் அகல்யா.சாப்டியா அகல்யா இல்ல ஏதாவது டிஃபன் சாப்பிடறியா என்றவனுக்கு வேண்டாம்டா என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டு அவன் கை பற்றி புகைவண்டி வரும் பக்கமாய் நகரலானாள் .

எப்போதும் போல மூணாவது கம்பார்ட்
மெ ன்ட்ல ஏறிடலாம் அகல்யா.. அங்க தான் கூட்டம் கம்மியா இருக்கும் என்று சரியாக வந்து மூணாவது கம்பார்ட்மென்ட்ல் ஏறி ஒரு இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.மாலையும் அதே கம்பார்ட்மென்ட்ல் வீடு திரும்ப அந்தி சூரியன் மறைய துவங்குகையில் மிதமான காற்று வருட துவங்கியது.
அகல்யா நீ எப்போ என் கூடவே இருப்ப? எனக்கு உன்னை
விட்டு இருக்க முடியலடா..உன்னைஎங்கெல்லாம் கூட்டிட்டு போகணும் தெரியுமா...மெல்ல அவள் தோள் சாய்ந்து காற்றில் மிதக்கும் கூந்தல் வாசனை பற்றிய படி கூறலானான் ...தாஜ்மஹால், எகிப்து ப்ரமிட், ஈ ஃபில் டவர் இப்டி எல்லா அதிசயத்தயும் பள்ளிக்கூடம்
படிக்கும் போது கேள்வி பட்டிருக்கோம். உன்னை அங்கெல்லாம் கூட்டி போகணு
ம் அகல்யா . பக்கத்துல போய் தொட்டு ரசிக்கணும்..உன்னை ரொம்ப ஹாப்பியா வச்சுக்கணும், உன் கூடவே எப்போதும் இருக்கணும். எனக்கு இப்போ எப்டி இருக்கு தெரியுமா அப்டியே எங்கயாவது போய்டணும் போல இருக்கு.. சொல்லிக் கொண்டிருக்கும் போதே அகல்யாவின் கண்ணீர் துளிகள் அவனது வார்த்தைகளை ஆமோதிதத்து.
கதிர், நாலாவது ஸ்
டேஷ ன் வந்தாச்சுடா...அடுத்து இறங்கணும் ..விட்டுட போறோம்...
என்ற படி இருவரும் எழுந்து இறங்கினர். மாலைக்கதிரின் இதம் இருவரின் கவலையும்
மறைத்து கொஞ்சம் இதமாக்கியது. அகல்யா கண்டிப்பா நீ போய் தான் ஆகணுமா? நாளைக்கு சன்டே லீவ்...ப்ச் உன்னை பாக்கமுடியாது கொஞ்ச நேரம்
உக்காந்து பேசிட்டு போலாமா...என்ற கதிரின் கை பற்றி பக்கமாய் இருந்த பலகையில் அமர்ந்து அவள் கையை இருக்க பற்றி குழந்தையானான் கதிர்.
கதிர், இந்த சந்தோஷம் எப்போதும் இருக்குமாடா..உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லநீ மட்டும் தான் எனக்கு...நாளைக்கு உன் அப்பா அம்மா கூட என் வீட்டுக்கு வந்து பேசுடா ...
இனிமேலும் மறைக்க வேண்டாம்...கண்டிப்பா அவங்களால நம்மள புரிஞ்சுக்க முடியும்
என்ற அகல்யாவின் கைகளை இறுக்க பற்றினான்.
இன்னிக்கு நைட் எப்டியும் உன் அப்பா அம்மாகிட்ட பேசிட்டு நாளைக்கு வீட்டுக்கு வா கதிர்...உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது ..என்ன அகல்யா இப்டி சொல்ற..உனக்கு மட்டும் இல்ல எனக்கும்
தான் உன்னை விட்டு இருக்க முடியாது நீ எதை பத்தியும் கவலை படாத ..நான் பாத்துக்கறேன்...என்று சமாதானப்படுத்தி தேற்றினான் கதிர்...மக்கள் நடமாட்டம் குறைய ஆரம்பிக்க, நேரம் ஆவதை உறுதி செய்து வா அகல்யா கிளம்பலாம் லேட் ஆச்சு...நாளைக்கு எப்படியும் என் அப்பா அம்மாவுடன் வரேன் என்று பேசிக் கொண்டே
இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
காலை கதிரவன் உதய ஆரம்பிக்கும் நேரம், கதிரின் வருகைக்காக காத்திருந்தாள் அகல்யா.அவள் அறையை விட்டு வெளி வராமல் பக்கத்து மசூதியில் இருந்து வரும் தொழுகை சத்தம் கேட்டு மணி 9 ஆகி இருக்கும் என்பதை உறுதி செய்து, காலிங் பெல் சத்தம் கேட்கும் போதெல்லாம்
அகல்யாவின் இதயத் துடிப்பு இன்னும் அதிகமாகவே துடிக்க ஆரம்பித்தது.

இது அகல்யா வீடு தானே .....கதிரே தான்...குரல் கேட்டு உறுதி செய்தாள் ..உள்ளுக்குள் என்ன நடக்க போகிறதோ என பட படத்துக் கொண்டிருந்தாள்..ஆமாங்க...நீங்க....என்றபடி அகல்யாவின் அம்மா வந்து கேட்கவும் ..கதிரின் அப்பா, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என
துவங்கினார் .உக்காருங்க இதோ வந்துடறேன்
என்று கூறி அகல்யாவின் அப்பாவை அழைத்து வந்தாள் .
கதிரின் மௌனம் அகல்யாவின் மனதை பின்னி பிசைந்தது. அவனின் குரலுக்காக ஏங்கி தவித்தது .கதிரும் அதை அறியாமல் இல்லை...அவனும் அதையே எதிர்பார்த்திருந்ததால் இருவரின் பக்கமும் மௌனமே ராகமாகியது.
கதிர் நேத்து தான் எல்லாமே சொன்னான்.
உங்க பொண்ணு அகல்யாவும் என் மகன் கதிரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பராங்க. எங்களுக்கு இதுல ஏதும் ஆட்சேபம் இல்ல. உங்களுக்கும் சம்மதம்னா நல்ல நாள் பாத்து கதிருக்கும் அகல்யாக்கும் கல்யாணம் பண்ணிடலாம். ரெண்டு பெரும் ஒரே இடத்துல வேலை செய்றாங்க.. ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சு இருக்காங்க...அவங்க ரெண்டு
பேர் வாழ்க்கையை அவங்ககிட்டயே விட்டுடுவோம் என்று சொல்லி முடிக்கும் முன்பே கதிரின் அப்பாவை அகல்யாவின் அப்பா இறுக்க தழுவி கொண்டார்.
அந்த தழுவல் சம்மதம் என்பதை உணர்ந்த அம்மாக்கள் இருவரின் கண்களும் ஆனந்தத்தில்நிறைந்தது.
கதிர் நான் எதிர்பாக்கலடா...அம்மா அப்பா என்ன சொல்வாங்களோனு பயந்தேன் . நம்மள
சேத்து வச்சுடாங்க டா. கதிர், நீ இனிமே நான் செய்றததான் சாப்பிட போற..என்றவளுக்கு அதெல்லாம் என் அம்மா பாத்துப்பாங்க..நீ என்னை மட்டும் பாத்துக்கிட்டா போதும் என்ற குரல் கேட்டுஅனைவரும் சிரித்து வீட்டை கலகலப்பாக்கி விடை பெற்றனர்.

என்றும் இல்லாமல் அகல்யாவின் கன்னங்களில் செவ்வானம் குடி கொண்டிருந்தது. அம்மாடி நீங்க ரெண்டு பேரும் நல்லா இருங்கடா...இதான் எங்களுக்கு வேணும் ...கூடிய சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டு வர்றோம் என்ற கதிரின் பெற்றோரை நன்றியுடன் வழி அனுப்பினார்கள்.
நல்ல நாள் பார்த்து கோவிலில் அகல்யா கதிரின் விருப்பப்படி அவர்கள்
இருவரின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டும் அருகிருக்க மங்கல ஒலி முழங்க அகல்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான் கதிர் . மாலைக்கதிரவன் மறைய நிலவின் பிடியில் இருவரும் தள்ளப்பட்டனர். அகல்யா எனக்கு எப்டி என்னோட சந்தோஷத்த வெளிப்படுததறதுணு தெரில...நாம ரொம்ப குடுத்து வச்சு இருக்கோம்...கண்டிப்பா நாம நல்லா இருப்போம் அகல்யா
என்ற கதிரின் கூந்தல் கோதியபடி கதிர், எனக்கு உன்னைபாக்கணும் போல இருக்குடா...அடுத்த ஜென்மம் எனக்கு கண்டிப்பா இருக்கணும் ...உன்னை பாக்கணும்பாத்துக்கிட்டே இருக்கணும்...என்றவளை இறுக்கி அணைத்து எனக்கும் தான் அகல்யா என்றான் கதிர்....அகல்யா இனிமே ரெண்டு பேருக்கும் கைத்தடி வேணாம் எனக்கு மட்டும் போதும். உனக்கு, இனி நான் தான்
கைத்தடி என்று அவளுடையதை தூக்கி எறிய கதிரை தொடர்ந்தாள் அகல்யா கதிர்.

2 comments:

sankar said...

super ma,hello i see u r blog very nice see my blog http://tcln.blogspot.com & http://rajinispecial.blogspot.com click ads only

கௌசல்யா சங்கர் நம்பி said...

Thank you Shankar....Definitely i will see your blog.

Cheers
Kausalya.